ஐயனைக் காண வாருங்கள்!
அழகு மெய்யனைக் காண வாருங்கள்!
உள் உருகி பாடுவோம் வாருங்கள்!
நல் உறவு சமைப்போம் வாருங்கள்!
நோன்பிருப்போம் வாருங்கள்!
நைந்துருகுவோம் வாருங்கள்!
பேதம் களைவோம் வாருங்கள்!
போதம் பெருவோம் வாருங்கள்!
இருமுடி தாங்குவோம் வாருங்கள்! இணைந்திருப்போம் வாருங்கள்!
மலை ஏறிச் செல்வோம் வாருங்கள்!
ஐயன் மனமிறங்கி அருள்வான் பாருங்கள்!
ஐயனைக் காண வாருங்கள்!
அழகு மெய்யனைக் காண வாருங்கள்!