சரவணப் பொய்கையில் நீராடி
சரவணப் பொய்கையில் நீராடி- துணை
தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் – அந்த
மன்னவன் இன்னருள் மலர் தந்தான் (சரவணப் பொய்கையில்)
![](https://divineinfoguru.com/wp-content/uploads/2018/07/7-importance-of-worshiping-lord-ganesh-on-wednesday-6-882-IFR-img-6-1-300x225.jpg)
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை- அந்த
அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை- கண்டு
என்னிடம் நான் கண்டேன் மாறுதலை (சரவணப் பொய்கையில்)
நல்லவர் என்றும் நல்லவரே -உள்ளம்
உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்ல இடம் நான் தேடி வந்தேன் – அந்த
நாயகன் என்னுடன் கூட வந்தான் (சரவணப் பொய்கையில்)