ஆயிரம் ராகம் ஆயிரம் தாளம்
ஆயிரமாயிரம் பல்லவிகள்-அதில்
ஏகாந்த மோன ஸ்ருதியாய் நிற்கும்
ஓங்கார நாதமாம் சபரிமலை (ஆயிரம்)
நீலாகாசமும் மரகத பூமியும் ஆனந்த சங்கீத தாரையாக
அர்ச்சனை மந்திரமும் ஜீவநாளங்களும் உன்முன்னால்
கைகூப்பி தொழுதிடவே மனமுருகி மெய்மறந்து நின்றேனே
நான் ஊமை அமுதம் ருசித்தது போல் (ஆயிரம்)
கோடி ஜென்மங்களில் இரவும் பகலும் சிந்திய கண்ணீர்
உறைந்ததாவா-அருளொளி மணிகண்டன் பாதங்கள்
அலங்கரிக்க துளசி இலை கண்ட பாக்கியம் தர்சன பாக்கியமாம்
தீர்த்த முன்டேனே நான் ஊமை இனிப்பு உண்டது போல் (ஆயிரம்)