ஆடிவெள்ளிக் கிழமையன்று | Aadi Velli Kizhamai Andru

ஆடிவெள்ளிக் கிழமையன்று
அம்மனுக்கு மஞ்சள் காப்பு
ஆதி சக்தி கருமாரி அம்மனுக்கு
அழகிய மஞ்சள் காப்பு அழகிய மஞ்சள் காப்பு
கூடி அவளைக் கம்பிடுவோர்க்கு கோடி நன்மைகள் பாடு
ஆடியில் அவளை கொண்டாடி ஆயிரம் நாமங்கள் கூறு (ஆடி)

வேற்காட்டில் குடியிருக்கும் வேப்பிலைக்காரி
கூவும் அன்பர் குறைதீர்க்கம் கோவிந்த மாரி
தாரணியின் தாயவளே நாரணி ஓங்காரி
பாரெல்லாம் படியளக்கம் பரமசிவன் பாரி (ஆடி)

குங்குமத்தில் குளித்து நிற்பாள் குங்குமக்காரி
மஞ்சளுடன் நிறைந்திருப்பாள் மங்களமாரி
நெஞ்சார துதித்து நின்றால் அணைத்திடுவாள் வாரீர்
அன்னைபோலக் காத்திடுவாள் ஆனந்த சுகுமாரி (ஆடி)