தெய்வத்தின் தெய்வம் எங்கள் | Deivathin Deivam Engal Verkattu Mari
தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி
தெவிட்டாத தீந்தமிழ் பாடிடுவோம் வாருர்
வேண்டுவதைக் கொடுத்திடுவாய் வேதவல்லி மாரி
கோமதியே சங்கரியே குணவதியே மகமாயி (தெய்வ)
கருமை நிறம் கொண்டவளே கரத்தாயி கருமாரி
கண்ணாயிரம் கொண்டவளே கண்கண்ட கருமாரி
ஓயாமல் நின் நாமம் உரைக்கின்ற உன் மக்கள்
மாறாத நின் புகழை பாடிவாரேன் அருள் மாரி (தெய்வ)
கல்லாக இருந்தாலும் கருணை உள்ளம் கொண்டவள் நீ
காணவரும் பக்தருக்கு காட்சி தரும் தேவி நீ
காலன்வட உனைக்கண்ட கால்தவறி சென்றிடுவான்
காத்தாயி கருமாரி மகமாயி மாகாளி (தெய்வ)