வேற்காட்டில் வீற்றிருக்கும் | Verkattil Veetrirukkum Lyrics in Tamil

வேற்காட்டில் வீற்றிருக்கும் | Verkattil Veetrirukkum Lyrics in Tamil

வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரி
நாற்கதியும் தந்திடுவாய் ஞானதேவி மாரி
நீ நாவினிலே வந்திடுவாய் நாதமாக மாரி
ஆவலுடன் ஆடிவா நீ நாகமாக மாறி
கருநாகமாக மாறி கருமாரி உருமாறி மகமாயி
கற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரி
அற்புதமாய உலகினையே ஆட்சி செயுயம் மாரி
கற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரி
அற்புதமாய உலகினையே ஆட்சி செய்யும் மாரி
கருனை உள்ளம் கொண்டவளே கண்ணான மாரி
பொற்காலம் வழங்கிடுவாய் பொன்னாக மாரி (வேற்கா)

கரக ஆட்டம் ஆடி வந்தோம் கருமாரி
மனை உருகிடவே நாடி வந்தோம் முத்துமாரி
பம்பை உடுக்கை முழங்கிடவே ஆடி வரும் மாரி
உன்னைக் கும்பிடவே ஓடிவந்தோம் அம்பிகையே மாரி (வேற்கா)