காலமெல்லாம் காத்திருந்தாலும் | Kalamella Kathirunthalum Lyrics
காலமெல்லாம் காத்திருந்தாலும்
காணக் கிடைக்காதவள் கருமாரி
கனிந்துருகி உள்ளம் கொதித்தவர்க்கு
கணத்திலே காட்சி தந்திடுவாள் தேவி கருமாரி
காலமெனும் தேரிலேறி கருமாரி நீ வருகையிலே
காணக் கண் கூசுதம்மா கோடி ஜோதி தெரியுதம்மா
பூரண நிலவினிலே பொன்மேனி ஒளி விடவே
புற்றினிலே தோன்றுவாள் எங்கள் கருமாரியம்மா
புண்பட்ட மனதிலெல்லாம் பூரணமாய் நிறைந்திடவே
பொங்கிடும் செல்வமெல்லாம் பூரணமாய் நிறைந்திடவே
கருநாகமாய் வந்திடுவாள் கைகுவித்த பேருக்கு
காட்சியும் கொடுத்திடுவாள் எங்கள் கருமாரியம்மா
திரிசூலம் ஏந்திடுவாள் திருநீறு அணிந்திடுவாள் (திரி)
தீராத நோயெல்லாம் தீர்த்திடுவாள் கருமாரி
சரவிளக்கு சுடர்விடவே
சாற்றிய மாலையெல்லாம் உருமறைக்க
கற்பூரம் காட்டியே கை தொழுதால்
கண் திறந்து பார்த்திடுவாள் எங்கள் கருமாரி
கிணிமணி கிலுகிலுக்க கால் சலங்கை சலசலக்க
உடலெங்கும் சிலுசிலுக்க உன் சிரிப்பொலி கேட்குதம்மா
எங்கள் சிந்தையும் குளிருதம்மா (திரி)
கருணை உள்ளம் கொண்டவளே எங்கள் கருமாரி
கண்ணாயிரம் கொண்டவளே எங்கள் கருமாரி
பொன்னாபரணம் பூண்டவளே எங்கள் கருமாரி
பண்ணாயிரம் பாட வந்தோம் எங்கள் கருமாரி