அனைத்தும் நீயே மணிகண்டா!
அனைத்தும் நீயே மணிகண்டா!
அண்டத்தின் தலைவா மணிகண்டா!
அகில நாயகனே மணிகண்டா!
அகோரன் மகனே மணிகண்டா!
அதிசயப் பிறவியே மணிகண்டா!
அணைத்திட ஓடிவா மணிகண்டா!
அதிகுண அப்பனே மணிகண்டா!
அதிர்வேட்டுப் பிரியனே மணிகண்டா!
அம்புவில் தரித்தோனே மணிகண்டா!
அம்புஜ மலர்ப்பாதனே மணிகண்டா!
அருளே பொருளே மணிகண்டா!
அருள்தர அவதரித்தாய் மணிகண்டா!
அருட்கலை உருவே மணிகண்டா!
அருமை மிகுந்தவனே மணிகண்டா!
அர்ச்சனை செய்வோம் மணிகண்டா!
அபாயம் வராது காப்பாய் மணிகண்டா!
அனுக்கிரஹம் செய்வாய் மணிகண்டா!
அவனிதழைக்கச் செய்வாய் மணிகண்டா!