பவனி வருகிறார்
பக்த பரிபாலன் இதோ பவனி வருகிறார்
பந்தளத்து வீரன் இதோ பவனி வருகிறார்
குறைகள் எல்லாம் போக்கிடவே பவனி வருகிறார்
குளத்தூர் புகழ் பாலன் இதோ பவனி வருகிறார்
அச்சன் கோவில் அரசன் இதோ பவனி வருகிறார்
அச்சம் அதை போக்கிடவே பவனி வருகிறார்
ஆரியங்காவு அய்யன் இதோ பவனி வருகிறார்
ஆனந்தமாய் நடனமாடி பவனி வருகிறார்
வில்லும் அம்பும் கையில் ஏந்தி பவனி வருகிறார்
வில்லாளி வீரன் இதோ பவனி வருகிறார்
வினைகள் எல்லாம் போக்கிடவே பவனி வருகிறார்
வீர மணிகண்டன் இதோ பவனி வருகிறார்
சபரிகிரிவாசன் இதோ பவனி வருகிறார்
சாந்த ஸ்வரூபன் இதோ பவனி வருகிறார்
சாந்தி அதை பொழிந்திடவே பவனி வருகிறார்
நற்கதியை தந்திடவே பவனி வருகிறார்
ஐயப்பன் பவனி வருகிறார்