Hariharan Selvanam Ayyappan Samiyai

ஹரிஹரன் செல்வனாம் ஐயப்பசாமியை
மனமென்னும் கோவிலில் வைத்தேன்
வரமருரும் தெய்வத்தின் சபரிமலை வந்து
ஐயப்ப தரிசனம் கண்டேன்
சன்னத்தியில் கற்பூர ஜோதி தைமாத
விண்ணிலே தெய்வீத ஜோதி

காத்திடும் தெய்வமாம் ஐயப்பசாமி
ஜோதியின் தரிசனம் ஜன்ம புண்யம்
லோகவீரம் மஹாபூஜ்யம் சர்வ ரக்ஷாஹரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

மலைவந்து கூடிடும் பல லட்சம் பக்தர் மொழிகின்ற
மொழிகளனைத்தும் வெவ்வேறு வார்த்தையில்
ஐயப்ப சாமியை துதி செய்யும் பாடலேயாகும்
பாடலின் பின்னணி கோல மணியோசையாய்
இசை நாத்ம் உயிரில் கலக்கும்
இதயமெங்கும் சிலித்திட நின்றேன்
பாடும் வரம் தரும் ஜயப்பசாமி காணவே
பூலோகம் கொண்ட புண்யம்
பாண்டேச வம்ச திலகம் கேரள கேலி விக்ரகம்
ஆத்தத்ரான பரம்தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யகம்

இந்த மண்ணில் என்றும் அன்பை விதைத்திடும்
சிறு மந்திரம் தேன் மணக்கும் அழகுக்குப்
பொருள் தந்த ஐயனின் ரூபத்தில் மாறாத கருணை மணக்கும்

பக்திக்கு பலன் தரும் சன்னதி எங்குமே பூவுடன்
நெய்யும் மணக்கும் – வாசமாகிடும் உள்ளமே என்றும்
பாவங்கள் போக்கிடும்-ஐயப்பசாமி
பாதத்தில் மலராகும் எங்கள் நெஞ்சம்
(ஹரிஹர)