Kailasa Thirumalaiyil Thiruvedan – Ayyappan Bajanai Songs

கைலாசத் திருமலையில் திருவேடன் ரூபம் கொண்டு
திருவேடப் பெண்ணோடு வந்து பூதப்படை
முரசமுழக்க திருவேட்டையாட திருவேட்டையாட
திருவேட்டையாட (கைலாச)

மதயானை கொம்பொடித்து களிமண்ணில்
தினைவித்து எடுத்து விதைத்து வேடப் பெண்ணாள்
வெள்ளி வெயில் சாந்தணிந்து செந்தினை பூத்து
அம்பினால் காவல் காத்த பூத்திருவேடன் (கைலாச)

மறுமலையில் போரழைப்பு காற்றில் ஒலிக்க
செஞ்சடை மேல் அம்புதைக்க வேடன் கோபிக்க
அம்பெல்லாம் மலரம்பாக்கினாள் வேடப் பெண்ணாள்.
கைலாசம் பூமலையாக திருவாதிரை இரவாக (கைலாச)

கல்லும் முள்ளும் நிறைந்த வனத்தில் நான்
ஆதித்ய பாதங்கள் தேடி ஆளும் சம்சார
ஆழியின் அக்கரை சத்யமாம் கோதியைத் தேடி (கல்லும்)

கரிமலையும் அழுதையும் மகாநதி பம்பையும்
இளமலரும் வண்டுகளும் ஏகாந்த மேகமும்
அகம் இருள் அகற்றிடும் கனகமணி தீபமாம்
வில்லாளி வீரனின் நாமமும் சொல்லவே. (கல்லும்)

மலையேறும் காலடிகள் அலையும் நடை வழிகள்
பதினெட்டு திருப்படிகளாக வேண்டும்
நாவினில் வருகின்ற தீயசொல் வார்த்தைகள்
அமர வேதாந்தங்களாக வேண்டும்.
பஞ்ச பூதத்தால் உருவான என் தேகம்
பாவன கோவிலாய் மாற வேண்டும் (கல்லும்)

ஜென்ம ஜென்மாந்திர புண்ணிய பாவங்கள்
இருமுடிக் கட்டாக ஏற்ற வேண்டும்
மோகாந்த நித்திரைகள் மணிகண்டேசுவரா
தியான மனோலயம் ஆக வேண்டும்
காமமும் கர்மமும் லோகமும் மோகமும் – உன்
பாத பக்தியாய் மாற வேண்டும் (கல்லும்)