தியாக ராஜ சங்கீதம் ஸ்ரீராமன்
புரந்தர சங்கீதம் ஸ்ரீகிருஷ்ணன் (தியாக)
சுவாதியின் சங்கீதம் பத்மநாபன்
அனைவரின் சங்கீதம் ஐயப்பன் சுவாமி ஐயப்பன்
சுவாமி சங்கீதத்தின் அமுத சங்கீதத்தின்
ஆரோகணம் சபரி மாமலை
பாடிடும் பொழுது பக்திப் பெருகி
மலை உச்சி நாடும் எனது உள்ளம்
ஸ்வர ராஜ பூஜை என்றும் (தியாக)
ஆரோகணம் சபரி மாமலை
பாடிடும் பொழுது பக்திப் பெருகி
மலை உச்சி நாடும் எனது உள்ளம்
ஸ்வர ராஜ பூஜை என்றும் (தியாக)
செவியினில் தேன் சிந்தும் இனிய சங்கீதத்தின்
ஆரோகணம் பம்பா தீர்த்தம்
கானம் என்னும் இசை சாதகத்தின்
அலையாய் பெருகும் எனது மனம்
ஸ்ருதி சுத்த நாத உள்ளம் (தியாக)