திருத்தணி மலையினிலே திருநாளாம்
திருப்புகழ் பாடிடும் பெருநாளாம்
திருப்படி உற்சவம் சிவன்மகன் பொற்பதம்
தேரினில் வலம்வரவே அற்புதம் (தித்தணி)
ஆடிமாதக் கார்த்திகையில் அன்பரெல்லாம் தேடிவந்து
பாடியே படிகளிலே பக்திசுவைப் பெருக்கிடுவார்
சரவணன் பொய்கை தனில் அழகிய முருகனுமே
திருவிழா நாளினிலே தெப்பத்தில் வலம்வருவான்
காவடிகள் ஆடிவந்து கந்தனின் திருவடியை
நாடியவர் வேண்டியதை தந்து மகிழ்வான் (திருத்தணி)
தைப்பூசத் திருநாளில் கொட்டுமேளம் முழங்கிடவே
கூட்டம் மாலையுடன் கோடிகோடி மாந்தர்வர
தணிகையில் அமர்ந்திருந்து தரணியில் நலம் விளங்க
கனிவுடன் வேண்டியதை கந்தனும் அருளிடுவான்
சித்திரையின் பௌர்ணமியில் முழுமதி வானில்லவர
சாந்தமுடன் முருகனும் காட்சிதருவான் (திருத்தணி)