Vel Maaral Maha Manthiram | வேல் மாறல் மஹா மந்திரம்
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.
( இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் )
( பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் “திரு” என்ற இடத்தில் மேற்கண்ட முழு
அடியையும் கூறவேண்டும் )
- பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் (திரு ) - திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே (திரு ) - சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் (திரு ) - தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் (திரு ) - பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் (திரு ) - சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் (திரு ) - துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் (திரு ) - தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் (திரு ) - பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் (திரு ) - திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் (திரு ) - சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் (திரு ) - தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் (திரு ) - பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் (திரு ) - திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் (திரு ) - சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் (திரு ) - சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் (திரு ) - சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் (திரு ) - சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் (திரு ) - பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் (திரு ) - திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் (திரு ) - சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் (திரு ) - தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் (திரு ) - பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் (திரு ) - திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் (திரு ) - துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் (திரு ) - தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் (திரு ) - பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் (திரு ) - சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் (திரு ) - சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் (திரு ) - தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் (திரு ) - பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் (திரு ) - திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே (திரு ) - தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் (திரு ) - சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் (திரு ) - திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே (திரு ) - பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் (திரு ) - தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் (திரு ) - துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் (திரு ) - சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் (திரு ) - பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் (திரு ) - தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் (திரு ) - சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் (திரு ) - திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் (திரு ) - பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் (திரு ) - சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் (திரு ) - சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் (திரு ) - திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் (திரு ) - பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் (திரு ) - திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் (திரு ) - பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் (திரு ) - சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் (திரு ) - சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் (திரு ) - திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் (திரு ) - பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் (திரு ) - தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் (திரு ) - சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் (திரு ) - சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் (திரு ) - பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் (திரு ) - தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் (திரு ) - துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் (திரு ) - திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே (திரு ) - பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் (திரு ) - தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் (திரு ) - சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் (திரு ) - திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே (திரு )
( முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும் )
தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணுவாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் ம் குன்றும்
தொளைத்தவேல் உண்டே துணை.
வேலும் மயிலும் துணை