Category «சிவன் பாடல்கள்»

நாவினுக்கு உகந்த நமசிவாய மந்திரம் | Namashivaya Manthiram Song

நாவினுக்கு உகந்த நமசிவாய மந்திரம் | Namashivya Manthiram Paadal நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம்நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம் ஐந்தெழுத்து சிவபெருமான் ஆட்சி செய்யும் பீடமாம்ஆறெழுத்து சரவணனும் காட்சி நல்கும் மாடமாம்நைந்து வாழும் மக்களுக்கு நோய்நொடியைப் போக்கிடநன்மருந்தைத் கொடுக்க வந்த நீலகண்டன் மந்திரம் (நம) வைத்தியராய்ப் பணிபுரிந்து வையகத்தைக் காக்கவேவைத்தியநாதனாய் வந்துதித்தான் சங்கரன்வைத்தியமும் பாதகமும் இங்கு வந்து சேராமல்பனிபோல் விலக வைக்கும் நமசிவாய மந்திரம் (நம) தந்தை தாயும் தனயனோடு வாழுகின்ற வீடிதுசந்தனமும் பன்னீரும் …

நமச்சிவாயத் திருப்பதிகம் | சொற்றுணை வேதியன் | Sotrunai Vedhiyan Lyrics Tamil

நமச்சிவாயத் திருப்பதிகம் | சொற்றுணை வேதியன் | Sotrunai Vedhiyan Lyrics Tamil சொற்றுணை வேதியன் சோதிவானவன்பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்நற்றுணை யாவது நமச்சி வாயவே பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரைஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லதுநாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தைநண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்அடுக்கற்கீழ்க் கிடக்கினு …

தலையே நீ வணங்காய்: திரு அங்க மாலை | Thiru Anga Maalai

தலையே நீ வணங்காய்: திரு அங்க மாலை | Thiru Anga Maalai தலையே நீ வணங்காய் – தலைமாலை தலைக்கணிந்துதலையாலே பலி தேருந் தலைவனைத்தலையே நீ வணங்காய். கண்காள் காண்மின்களோ – கடல்நஞ்சுண்ட கண்டன் தன்னைஎண்டோள் வீசி நின்றாடும் பிரான்தன்னைக்கண்காள் காண்மின்களோ. செவிகாள் கேண்மின்களோ – சிவன்எம்மிறை செம்பவளஎரிபோல் மேனிப் பிரான் திறமெப்போதுஞ்செவிகாள் கேண்மின்களோ மூக்கே நீமுரலாய் – முதுகாடுறை முக்கணனைவாக்கே நோக்கிய மங்கை மணாளனைமூக்கே நீ முரலாய். வாயே வாழ்த்து கண்டாய் – மதயானையுரி …

பிரதோஷ சிவநாமாவளிகள் | Pradosha Shivanamavali

பிரதோஷ சிவநாமாவளிகள் | Pradosha Shivanamavali கைலாச வாசா கங்காதராஆனந்தத் தாண்டவ சதாசிவாஹிமகிரி வாசா சாம்பசிவாகணபதி சேவித்ஹே பரமேசாசரவண சேவித்ஹே பரமேசா சைலகிரீஸ்வர உமா மஹேசாநீலலோசன நடன நடேசாஆனந்தத் தாண்டவ சதாசிவஹிமகிரி வாசா சாம்பசிவா

நாதநாம மகிமை | Nathan Namam Namasivaya

நாதநாம மகிமை | Nathan Namam Namasivaya போலோ நாத உமாபதேசம்போ சங்கர பசுபதேநந்தி வாகன நாக பூஷணசந்திரசேகர ஜடாதராகங்காதார கௌரி மனோகரகிரிஜா ரமணா சதாசிவா (போலோ) கைலாசவாசா கனகசபேசாகௌரி மனோகர விஸ்வேசாஸ்மாசன வாஸா சிதம்பரேசாநீலகண்ட மஹாதேவா (போலோ) சூலாதாரா ஜ்யோதிப் பிரகாசாவிபூதி சுந்தர பரமேசாபம் பம் பம் பம் டமருகநாதபார்வதி ரமணா சதாசிவா (போலோ)

வழிவிடு நந்தி வழிவிடுவே | Vazhi Vidu Nandi Lyrics in Tamil

நந்திதேவர் வணக்கம் | வழிவிடு நந்தி வழிவிடுவே | Vazhi Vidu Nandi Lyrics in Tamil (ஆடுக ஊஞ்சல் ஆடுகவே என்ற மெட்டு) வழிவிடு நந்தி வழிவிடுவேவாழ்வில் நாங்கள் வளர்ந்துயரவழிவிடு நந்தி ! வழிவிடுவேவையகம் வளர வழிவிடுவே. (வழிவிடு) எம்பிரான் சிவனைச் சுமப்பவனேஎல்லா நலனும் தருபவனேஏழைகள் வாழ்வில் இருளகலஎன்றும் அருளைச் சுரப்பவனே. (வழிவிடு) நீரில் என்றும் குளிப்பவனேநெய்யில் என்றும் மகிழ்பவனேபொய்யில்லாத வாழ்வு தரபொங்கும் கருணை வாரிதியே. (வழிவிடு) உந்தன் கொம்பு இரண்டிடையேஉமையாள் பாகன் காட்சிதரதேவர் எல்லாம் …

நாட்டமுள்ள நந்தி பாடல் | Nandhiyithu Nandhiyithu Song Lyrics

நாட்டமுள்ள நந்தி நந்தியிது நந்தியிது நாட்டமுள்ள நந்தியிதுநந்தனுக்கு நலம்புரிந்த நலமான நந்தியிதுசெந்தூரப் பொட்டுவைத்து சிலிர்த்துவரும் நந்தியிதுசிந்தையில் நினைப்பவர்க்குச்செல்வம்தரும் நந்தியிது (நந்தி) தில்லையில் நடனமாடும் திவயநாதன் நந்தியிதுஎல்லையில்லா இன்பம்தரும் எம்பெருமான் நந்தியிதுஒற்றை மாடோட்டியெனும் உலகநாதன் நந்தியிதுவெற்றிமேல் வெற்றிதரும் வேந்தன்நகர் நந்தியிது பச்சைக்கிளி பார்வதியாள் பவனிவரும் நந்தியிதுபார்ப்பவர்க்குப்பலன்கொடுக்கும் பட்சமுள்ள நந்தியிதுசங்கம் முழங்குவரும் சங்கரனின் நந்தியிதுஎங்கும் புகழ்மணக்கும் எழிலான நந்தியிது (நந்தி) கொற்றவன் வளர்த்துவந்த கொடும்பாளுர் நந்தியிதுநற்றவர் பாக்கியத்தால் நமக்குவந்த நந்தியிதுநெய்யிலே குளித்துவரும் நேர்மையுள்ள நந்தியிதுஈஎறும்பு அணுகாமல் இறைவன்வரும் நந்தியிது (நந்தி) …

நலம் சேர்க்கும் நந்தீஸ்வரர் துதி | Nalam Serkum Nandhi Thuthi

நலம் சேர்க்கும் நந்தீஸ்வரர் சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்திசேவித்த பக்தர்களைக் காக்கும் நந்திகவலைகளை எந்நாளும் போக்கும் நந்திகைலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்திபார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்திநல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்திநாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்திசிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்திமங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்திமனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி அருகம்புல் மாலையையும் அணியும் நந்திஅரியதொரு வில்வமே ஏற்ற நந்திவரும் காலம் நலமாக வைக்கும் நந்திவணங்குகிறோம் …

நலந்தரும் நந்தி பாடல் | Nalam Tharum Nandi Lyrics in Tamil

நலந்தரும் நந்தி பாடல் | Nalam Tharum Nandi Lyrics in Tamil கந்தனின் தந்தையைத் தான் கவனமாய்ச் சுமந்து செல்வாய்நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய்அந்தமாய் ஆதியாகி அகிலத்தைக் காக்க வந்தாய்நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்ஒன்பது கோள்களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய்பொன் பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய் சிந்தனை வளங்கொடுப்பாய் சிகரத்தில் தூக்கி வைப்பாய்நந்தியே உனைத்துதித்தேன் நாடிவந்தெம்மைக் காப்பாய்மாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்க வைப்பாய்வேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றி …