கணபதியே வருவாய் | Ganapathiye Varuvai Song Lyrics in Tamil

கணபதியே வருவாய் | Ganapathiye Varuvai Song Lyrics in Tamil

Ganapathiye Varuvai Song Lyrics in Tamil from Vinayagar Songs. Ganapathiye Varuvai Song Lyrics has penned by Ulundurpettai Shanmugam.

கணபதியே வருவாய் அருள்வாய்
கணபதியே வருவாய் அருள்வாய்
கணபதியே வருவாய்

மனம் மொழி மெய்யாலே
தினம் உன்னைத் துதிக்க
மனம் மொழி மெய்யாலே
தினம் உன்னைத் துதிக்க

மங்கள இசை எந்தன்
நாவினில் உதிக்க
மங்கள இசை எந்தன்
நாவினில் உதிக்க
கணபதியே வருவாய்

ஏழு சுரங்களில் நானிசை பாட
எங்குமே இன்பம் பொங்கியே ஓட
ஏழு சுரங்களில் நானிசை பாட
எங்குமே இன்பம் பொங்கியே ஓட

தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட
கனபதியே வருவாய்

தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென கனிரேன்றொலிக்க
தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென கனிரேன்றொலிக்க

ஊத்துக நல்லிசை உள்ளம் களிக்க
உண்மை ஞானம் செல்வம் கொழிக்க
கணபதியே வருவாய் அருள்வாய்
கணபதியே வருவாய்