மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாசக பாத நமஸ்தே
பொருள் விளக்கம்
மூஷிக வாகன – மூஷிகம் என்றும் மூஞ்சுறு/எலியை ஊர்தியாகக் கொண்டவரும்
மோதக ஹஸ்த – கொழுக்கட்டையை திருக்கைகளில் ஏந்தியவரும்
சாமர கர்ண – விசிறி போன்ற திருக்காதுகளைக் கொண்டவரும்
விளம்பித சூத்ர – கயிற்றினை இடையைச் சுற்றி அணிந்தவரும்
வாமன ரூப – குறுகிய உருவை உடையவரும்
மஹேஸ்வர புத்ர – மஹேஸ்வரனாம் சிவபெருமானின் திருமகனும் ஆன
விக்ன விநாசக – தடைகளை நீக்கும் விநாயகரின்
பாத நமஸ்தே – திருப்பாதங்களை வணங்குகிறேன்.