Category «Devotional Songs Lyrics»

Ayyappan Songs – Aayiram Deepangal

ஆயிரம் தீபங்கள் ஆயிரம் தீபங்கள் ஆயிரம் தீபங்கள் ஆயிரம் தீபங்கள் கண்ணில் தெரியுது பம்பையாற்றில் மணிகண்டன் பிறந்தது பம்பையாற்றில் (ஆயிரம் தீபங்கள்) சரணம் சரணம் ஐயப்பா சரணாகரனே ஐயப்பா சரணம் சரணம் சரணாகரனே ஸ்ரீ மணிகண்டா (சரணம் சரணம்) எரிமேலிதானே சென்றிடுவோம் பேட்டைதானே துள்ளிடுவோம் பேட்டைதுள்ளி வாபரை வணங்கி வனத்தின் நடுவே சென்றிடுவோம் (ஆயிரம் தீபங்கள்) அழுதா நதியை அடைந்திடுவோம் அளவில்லா இன்பம் கொண்டிடுவோம் அழுதையில் மூழ்கி கல்லினை எடுத்து கல்லிடும் குன்றில் இட்டிடுவோம் (ஆயிரம் தீபங்கள்) …

Achan Kovil Arase – Ayyappan Songs

அச்சன் கோவில் அரசே அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்கவா பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா இச்சைகொண்டேன் உந்தன் முன்னே ஈஸ்வரன் மைந்தா பச்சை வண்ணம் பரந்தாமன் மகிழும் செல்வா ஸ்வாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா ஆரியங்காவில் வாழும் ஆண்டவனே வா பார்வதியால் அகமகிழும் பாலகனே வா எருமேலி வீற்றிருக்கும் இறைவனே நீ வா தர்மஞான சாஸ்தாவே தயவுடனே வா ஸ்வாமி பொன் ஐயப்பா …

Pallikattu Sabarimalaikku – Ayyappan Song

Pallikattu Sabarimalaikku – பள்ளிக்கட்டு சபரிமலைக்கு இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம் இருவினை தீர்க்கும் யமனையும் வெல்லும் திருவடியை காண வந்தோம் பள்ளிககட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே அய்யப்போ சுவாமி சரணம் அய்யப்போ பள்ளிககட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே நெய் அபிஷேகம் சுவாமிக்கே கற்பூர தீபம் சுவாமிக்கே ஐயப்பன் மார்களும் கூடிக்கொண்டு ஐயனை நாடி சென்றிடுவார் சபரி மலைக்கு சென்றிடுவார் (சுவாமியே …

Navarathri Songs – கருணை தெய்வமே கற்பகமே

கருணை தெய்வமே கற்பகமே காணவேண்டும் உந்தன் பொற்பதமே என் (கருணை) உறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய் உன்னையன்றி வேறு யாரோ எம் தாய் (கருணை) ஆனந்த வாழ்வு அளித்திட வேண்டும் அன்னையே எம்மேல் இரங்கிட வேண்டும் நாளும் உன்னைத் தொழுதிடல் வேண்டும் நலமுடன் வாழ அருளல் வேண்டும் (கருணை)

Navarathri Songs – மாணிக்க வீணையேந்தும்

மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி தேந்தமிழ் சொல்லெடுத்துப் பாடவந்தோமம்மா பாடவந்தோமம்மா பாட வந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ – இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா (மாணிக்க) நாமணக்கப் பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் (மாணிக்க) வெள்ளை தாமரையில் வீற்றிருப்பாய் – எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே – என்றும் அள்ளி அருளைத் தரும் அன்னையும் …

Navarathri Songs – ஸ்ரீசக்ர ராஜ

ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி ஆகம வேத கலாமய ரூபிணி அகில சராசர ஜனனி நாராயணி நாக கங்கண நடராஜ மனோஹரி ஞான வித்யேஷ்வரி ராஜராஜே*ஸ்வரி (ஸ்ரீசக்ர) பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆடவும் பாடிக் கொண்டாடும் அன்பர் பத மலர் சூடவும் உலகம் முழுதும் என் அகமுறக் காணவும் ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஷ்வரி (ஸ்ரீசக்ர) உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய் உயரிய பெரியோர்கள் ஒன்றிடக் கூட்டி வைத்தாய் நிழலெனத் தொடர்ந்த முன்னாள் …

Navarathri Songs – ஜகத் ஜனனி சுகபாணி

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி (ஜகத்) சுக ஸ்வரூபிணி மதுர வாணி சொக்கனாதர் மனம் மகிழும் மீனாக்ஷி (ஜகத்) பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ பஞ்சமி பரமேஷ்வரி வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ வேத வேதாந்த நாத ஸ்வரூபிணி (ஜகத்)

Navarathri Songs – தேவி நீயே துணை

தேவி நீயே துணை தென்மதுரை வாழ் மீனலோசனி (தேவி) தேவாதி தேவன் சுந்தரேசன் சித்தம் கவர் புவன சுந்தரி அம்பா (தேவி) மலையத்வஜன் மாதவமே – காஞ்சன மாலை புதல்வி மஹாராக்னி அலைமகள் கலைமகள் பணி கீர்வாணி அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்த (தேவி)

Navarathri Songs – அம்பா மனம் கனிந்துனது

அம்பா மனம் கனிந்துனது கடைக்கண் பார் திருவடி இணை துணையென் (அம்பா) வெம்பவ நோயற அன்பர் தமக்கருள் கதம்ப வனக்குயிலே ஷங்கரி ஜகதம்பா (மனம்) பைந்தமிழ் மலர்ப்பாமாலை சூடி உன் பாதமலர்ப் பணிந்து பாடவும் வேண்டும் சிந்தையும் என் நாவும் என்னேரமும் நின் திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும் பந்த உலகில் மதிமயங்கி அறுபகைவர் வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும் இந்த வரம் தருவாய் ஜகதீ*ஸ்வரி எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி என் (அம்பா)