சரணம் சரணம் ஐயப்பா சாமிசரணம் ஐயப்பா
சாமிசரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
யானைமேல் அம்பாரிகாணவே ஆனந்தம்
ஐயப்பன் திருக்கோலம் ஆனந்தம் ஆனந்தம்
நல்லகுல தெய்வமய்யா ஐயப்பா
நாளும் நம்மை காத்திடும் ஐயப்பா (யானை)
எரிமலைப்பேட்டை துள்ளி காளைகட்டி வணங்கிவிட்டு
அழுதைமலை நதியடைந்து தள்ளிப்போ கல்லிடும் குன்றில்
உடும்பாறை மலையுச்சி கரிவலம் தோடும் தாண்டி
கரிமலைமீது ஏறி பம்பைநதி அடைந்தோம் (யானை)
கண்ணிமூலகணபதியை வணங்கியே நீலிமலை கடந்தோம்
அப்பாச்சி இப்பாச்சிதனை அடைந்தோம்
சபரிபீடம் கண்டு சரங்குத்தி தொழுது நின்றோம்
சன்னிதானம்சென்றடைந்தோம் சாமியை சரணடைந்தோம் (யானை)