திருப்புகழ் பாடல் 28 – Thiruppugazh Song 28 – அறிவழிய மயல்பெருக: Arivazhiya Mayal Peruga

திருப்புகழ் பாடல் 28 – திருச்செந்தூர்


ராகம் – காம்போதி ; தாளம் – கண்டசாபு (2 1/2)

தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன …… தனதானா

அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல
அனலவிய மலமொழுக …… அகலாதே

அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ
அழலினிகர் மறலியெனை …… யழையாதே

செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்
திருவடியி லணுகவர …… மருள்வாயே

சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு
செவிகுளிர இனியதமிழ் …… பகர்வோனே

நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரி
நிருதிநிதி பதிகரிய …… வனமாலி

நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி
நிருதனுர மறஅயிலை …… விடுவோனே

மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு
மகிழமடி மிசைவளரு …… மிளையோனே

மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின
மறையவுயர் கரையிலுறை …… பெருமாளே.