திருப்புகழ் பாடல் 27 – Thiruppugazh Song 27 – அளக பார மலைந்து குலைந்திட: Alaka Para Malainthu Kuzhainthida

திருப்புகழ் பாடல் 27 – திருச்செந்தூர்

தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன …… தனதான

அளக பாரம லைந்துகு லைந்திட
வதனம் வேர்வுது லங்கிந லங்கிட
அவச மோகம் விளைந்துத ளைந்திட …… அணைமீதே

அருண வாய்நகை சிந்திய சம்ப்ரம
அடர்ந காநுதி பங்கவி தஞ்செய்து
அதர பானம ருந்திம டுங்கிற …… முலைமேல்வீழ்ந்

துளமும் வேறுப டும்படி ஒன்றிடு
மகளிர் தோதக இன்பின்மு யங்குதல்
ஒழியு மாறுதெ ளிந்துளம் அன்பொடு …… சிவயோகத்

துருகு ஞானப ரம்பர தந்திர
அறிவி னோர்கரு தங்கொள்சி லம்பணி
உபய சீதள பங்கய மென்கழல் …… தருவாயே

இளகி டாவளர் சந்தன குங்கும
களப பூரண கொங்கைந லம்புனை
இரதி வேள்பணி தந்தையும் அந்தண …… மறையோனும்

இனது றாதெதிர் இந்திரன் அண்டரும்
ஹரஹ ராசிவ சங்கர சங்கர
எனமி காவரு நஞ்சினை யுண்டவர் …… அருள்பாலா

வளர்நி சாசரர் தங்கள்சி ரம்பொடி
படவி ரோதமி டுங்குல சம்ப்ரமன்
மகர வாரிக டைந்தநெ டும்புயல் …… மருகோனே

வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்
இடைவி டாதுநெ ருங்கிய மங்கல
மகிமை மாநகர் செந்திலில் வந்துறை …… பெருமாளே.