திருப்புகழ் பாடல் 112 – பழநி
தானா தனதன தானா தனதன
தானா தனதன …… தனதான
ஆதா ளிகள்புரி கோலா கலவிழி
யாலே யமுதெனு …… மொழியாலே
ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடை
யாலே மணமலி …… குழலாலே
சூதா ரிளமுலை யாலே யழகிய
தோடா ரிருகுழை …… யதனாலே
சோரா மயல்தரு மானா ருறவிடர்
சூழா வகையருள் …… புரிவாயே
போதா ரிருகழல் சூழா ததுதொழில்
பூணா தெதிருற …… மதியாதே
போரா டியஅதி சூரா பொறுபொறு
போகா தெனஅடு …… திறலோனே
வேதா வுடனெடு மாலா னவனறி
யாதா ரருளிய …… குமரேசா
வீரா புரிவரு கோவே பழநியுள்
வேலா இமையவர் …… பெருமாளே.