திருப்புகழ் பாடல் 179 – பழநி
ராகம் – பந்துவராளி ; தாளம் – அங்கதாளம் (8)
தகிட-1 1/2, தகதிமி-2,
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன …… தனதான
போத கந்தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம
பூத லந்தனை யாள்வாய் நமோநம …… பணியாவும்
பூணு கின்றபி ரானே நமோநம
வேடர் தங்கொடி மாலா நமோநம
போத வன்புகழ் ஸாமீ நமோநம …… அரிதான
வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
வீர கண்டைகொள் தாளா நமோநம …… அழகான
மேனி தங்கிய வேளே நமோநம
வான பைந்தொடி வாழ்வே நமோநம
வீறு கொண்டவி சாகா நமோநம …… அருள்தாராய்
பாத கஞ்செறி சூராதி மாளவெ
கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
பார அண்டர்கள் வானாடு சேர்தர …… அருள்வோனே
பாதி சந்தர னேசூடும் வேணியர்
சூல சங்கர னார்கீத நாயகர்
பார திண்புய மேசேரு சோதியர் …… கயிலாயர்
ஆதி சங்கர னார்பாக மாதுமை
கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயான நாரணி …… அபிராமி
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
ஆவி னன்குடி வாழ்வான தேவர்கள் …… பெருமாளே.