Thiruppugazh Song 219 – திருப்புகழ் பாடல் 219

திருப்புகழ் பாடல் 219 – சுவாமி மலை

தானதன தந்த தத்த தானதன தந்த தத்த
தானதன தந்த தத்த …… தனதான

சேலுமயி லுந்த ரித்த வாளையட ருங்க டைக்கண்
மாதரைவ சம்ப டைத்த …… வசமாகிச்

சீலமறை யும்ப ணத்தி லாசையிலை யென்ற வத்தை
காலமுமு டன்கி டக்கு …… மவர்போலே

காலுமயி ரும்பி டித்து மேவுசிலு கும்பி ணக்கு
நாளுமிக நின்ற லைத்த …… விதமாய

காமகல கம்பி ணித்த தோதகமெ னுந்து வக்கி
லேயடிமை யுங்க லக்க …… முறலாமோ

ஏலமில வங்க வர்க்க நாகம்வகு ளம்ப டப்பை
பூகமரு தந்த ழைத்த …… கரவீரம்

யாவுமலை கொண்டு கைத்த காவிரிபு றம்பு சுற்றும்
ஏரகம மர்ந்த பச்சை …… மயில்வீரா

சேலைமடல் கொண்டு சக்ர மால்வரைய ரிந்த வஜ்ர
பாணியர்தொ ழுந்தி ருக்கை …… வடிவேலா

சூர்முதிர்க்ர வுஞ்ச வெற்பும் வேலைநில மும்ப கைத்த
சூரனுட லுந்து ணித்த …… பெருமாளே.