Thiruppugazh Song 223 – திருப்புகழ் பாடல் 223

திருப்புகழ் பாடல் 223 – சுவாமி மலை
ராகம் – யதுகுல காம்போதி; தாளம் – அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தானான தான தத்த தானான தான தத்த
தானான தான தத்த …… தனதான

நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
நாலாறு நாலு பற்று …… வகையான

நாலாரு மாக மத்தி னுலாய ஞான முத்தி
நாடோ று நானு ரைத்த …… நெறியாக

நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
நேராக வாழ்வ தற்கு …… னருள்கூர

நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை
நீகாணெ னாவ னைச்சொ …… லருள்வாயே

சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி
சீராக வேயு ரைத்த …… குருநாதா

தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
தீராகு காகு றத்தி …… மணவாளா

காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
காவார்சு வாமி வெற்பின் …… முருகோனே

கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
காமாரி வாமி பொற்ற …… பெருமாளே.