Thiruppugazh Song 225 – திருப்புகழ் பாடல் 225

திருப்புகழ் பாடல் 225- சுவாமி மலை
ராகம் – ஹம்ஸாநந்தி; தாளம் – ஆதி

தனதன தனதன …… தனதான

நிறைமதி முகமெனு …… மொளியாலே
நெறிவிழி கணையெனு …… நிகராலே

உறவுகொள் மடவர்க …… ளுறவாமோ
உனதிரு வடிவியினி …… யருள்வாயே

மறைபயி லரிதிரு …… மருகோனே
மருவல ரசுரர்கள் …… குலகாலா

குறமகள் தனைமண …… மருள்வோனே
குருமலை மருவிய …… பெருமாளே.