திருப்புகழ் பாடல் 240 – திருத்தணிகை
ராகம் – நாதநாமக்ரியா/ஷண்முகப்ரியா; தாளம் – ஆதி
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன …… தனதான
அரகர சிவனரி அயனிவர் பரவிமு
னறுமுக சரவண …… பவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
அநலென எழவிடு …… மதிவீரா
பரிபுர கமலம தடியிணை யடியவர்
உளமதி லுறவருள் …… முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுக
பரமன திருசெவி …… களிகூர
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர …… வுயர்வாய
உலகம னலகில வுயிர்களு மிமையவ
ரவர்களு முறுவர …… முநிவோரும்
பரவிமு னநுதின மானமகிழ் வுறவணி
பணிதிகழ் தணிகையி …… லுறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
மிருபுடை யுறவரு …… பெருமாளே.