திருப்புகழ் பாடல் 245 – திருத்தணிகை
ராகம் – நளினகாந்தி; தாளம் – ஆதி தேசாதி
தனனதன தான தனனதன தான
தனனதன தான …… தனதான
உடையவர்க ளேவ ரெவர்களென நாடி
யுளமகிழ ஆசு …… கவிபாடி
உமதுபுகழ் மேரு கிரியளவு மான
தெனவுரமு மான …… மொழிபேசி
நடைபழகி மீள வறியவர்கள் நாளை
நடவுமென வாடி …… முகம்வேறாய்
நலியுமுன மேயு னருணவொளி வீசு
நளினஇரு பாத …… மருள்வாயே
விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர்
விகிர் தர்பர யோகர் …… நிலவோடே
விளவு சிறு பூளை நகுதலையொ டாறு
விடவரவு சூடு …… மதிபாரச்
சடையிறைவர் காண உமைமகிழ ஞான
தளர் நடையி டாமுன் …… வருவோனே
தவமலரு நீல மலர்கனைய நாதி
தணிமலையு லாவு …… பெருமாளே.