Thiruppugazh Song 253 – திருப்புகழ் பாடல் 253

திருப்புகழ் பாடல் 253 – திருத்தணிகை

தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன …… தனதான

கச்சணி யிளமுலை முத்தணி பலவகை
கைச்சரி சொலிவர …… மயல்கூறிக்

கைப்பொருள் கவர்தரு மைப்பயில் விழியினர்
கட்செவி நிகரல்குல் …… மடமாதர்

இச்சையி னுருகிய கச்சைய னறிவிலி
யெச்சமி லொருபொரு …… ளறியேனுக்

கிப்புவி மிசைகமழ் பொற்பத மலரிணை
யிப்பொழு தணுகவு …… னருள்தாராய்

கொச்சையர் மனையிலி டைச்சியர் தயிர்தனை
நச்சியெ திருடிய …… குறையால்வீழ்

குற்கிர வினியொடு நற்றிற வகையறி
கொற்றவு வணமிசை …… வருகேசன்

அச்சுதை நிறைகடல் நச்சர வணைதுயில்
அச்சுதன் மகிழ்தரு …… மருகோனே

அப்பணி சடையரன் மெச்சிய தணிமலை
யப்பனெ யழகிய …… பெருமாளே.