Thiruppugazh Song 271- திருப்புகழ் பாடல் 271

திருப்புகழ் பாடல் 271 – திருத்தணிகை

தனன தனனத் தனன தனனத்
தனன தனனத் …… தனதான

சொரியு முகிலைப் பதும நிதியைச்
சுரபி தருவைச் …… சமமாகச்

சொலியு மனமெட் டனையு நெகிழ்விற்
சுமட ரருகுற் …… றியல்வாணர்

தெரியு மருமைப் பழைய மொழியைத்
திருடி நெருடிக் …… கவிபாடித்

திரியு மருள்விட் டுனது குவளைச்
சிகரி பகரப் …… பெறுவேனோ

கரிய புருவச் சிலையும் வளையக்
கடையில் விடமெத் …… தியநீலக்

கடிய கணைபட் டுருவ வெருவிக்
கலைகள் பலபட் …… டனகானிற்

குரிய குமரிக் கபய மெனநெக்
குபய சரணத் …… தினில்வீழா

உழையின் மகளைத் தழுவ மயலுற்
றுருக முருகப் …… பெருமாளே.