திருப்புகழ் பாடல் 278 – திருத்தணிகை
ராகம் – சிந்துபைரவி ; தாளம் – கண்டஜம்பை (8)
தனத்த தத்தனத் …… தனதான
நினைத்த தெத்தனையிற் …… றவறாமல்
மிலைத்த புத்திதனைப் …… பிரியாமற்
கனத்த தத்துவமுற் …… றழியாமற்
கதித்த நித்தியசித் …… தருள்வாயே
மனித்தர் பத்தர்தமக் …… கெளியோனே
மதித் முத்தமிழிற் …… பெரியோனே
செனித்த புத்திரரிற் …… சிறியோனே
திருத்த ணிப்பதியிற் …… பெருமாளே.