Thiruppugazh Song 283 – திருப்புகழ் பாடல் 283

திருப்புகழ் பாடல் 283 – திருத்தணிகை

தானனத் தத்த தத்த தானனத் தத்த தத்த
தானனத் தத்த தத்த …… தனதான

பூசலிட் டுச்ச ரத்தை நேர்கழித் துப்பெ ருத்த
போர்விடத் தைக்கெ டுத்து …… வடிகூர்வாள்

போலமுட் டிக்கு ழைக்கு ளோடிவெட் டித்தொ ளைத்து
போகமிக் கப்ப ரிக்கும் …… விழியார்மேல்

ஆசைவைத் துக்க லக்க மோகமுற் றுத்து யர்க்கு
ளாகிமெத் தக்க ளைத்து …… ளழியாமே

ஆரணத் துக்க ணத்து னாண்மலர்ப் பொற்ப தத்தை
யான்வழுத் திச்சு கிக்க …… அருள்வாயே

வாசமுற் றுத்த ழைத்த தாளிணைப் பத்த ரத்த
மாதர்கட் கட்சி றைக்கு …… ளழியாமே

வாழ்வுறப் புக்கி ரத்ன ரேகையொக் கச்சி றக்கு
மாமயிற் பொற்க ழுத்தில் …… வரும்வீரா

வீசுமுத் துத்தெ றிக்க வோலைபுக் குற்றி ருக்கும்
வீறுடைப் பொற்கு றத்தி …… கணவோனே

வேலெடுத் துக்க ரத்தி னீலவெற் பிற்ற ழைத்த
வேளெனச் சொற்க ருத்தர் …… பெருமாளே.