திருப்புகழ் பாடல் 284 – திருத்தணிகை
தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் …… தனதான
பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம்
ப்ரபுத்தன பாரங் …… களிலேசம்
ப்ரமத்துட னாளும் ப்ரமித்திருள் கூரும்
ப்ரியக்கட லுடுந் …… தணியாத
கருக்கட லுடுங் கதற்றும நேகங்
கலைக்கட லுடுஞ் …… சுழலாதே
கடப்பலர் சேர்கிண் கிணிப்ரபை வீசும்
கழற்புணை நீதந் …… தருள்வாயே
தருக்கிய வேதன் சிறைப்பட நாளுஞ்
சதுர்த்தச லோகங் …… களும்வாழச்
சமுத்திர மேழுங் குலக்கிரி யேழுஞ்
சளப்பட மாவுந் …… தனிவீழத்
திருக்கையில் வேலொன் றெடுத்தம ராடுஞ்
செருக்கு மயூரந் …… தனில்வாழ்வே
சிறப்பொடு ஞானந் தமிழ்த்ரய நீடுந்
திருத்தணி மேவும் …… பெருமாளே.