திருப்புகழ் பாடல் 289 – திருத்தணிகை
தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் …… தனதான
மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெண்
மதிப்பிள வாகும் …… நுதலார்தம்
மயக்கினி லேநண் புறப்படு வேனுன்
மலர்க்கழல் பாடுந் …… திறநாடாத்
தருக்கனு தாரந் துணுக்கிலி லோபன்
சமத்தறி யாவன் …… பிலமுகன்
தலத்தினி லேவந் துறப்பணி யாதன்
தனக்கினி யார்தஞ் …… சபைதாராய்
குருக்குல ராஜன் தனக்கொரு தூதன்
குறட்பெல மாயன் …… நவநீதங்
குறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன்
குணத்ரய நாதன் …… மருகோனே
திருக்குள நாளும் பலத்திசை மூசும்
சிறப்பது றாஎண் …… டிசையோடும்
திரைக்கடல் சூழும் புவிக்குயி ராகுந்
திருத்தணி மேவும் …… பெருமாளே.