திருப்புகழ் பாடல் 338 | Thiruppugazh Song 338

திருப்புகழ் பாடல் 338 – காஞ்சீபுரம் : கமலரு சோகம் | Thiruppugazh Song 338

தனதன தானாந்தன தனதன தானாந்தன
தனதன தானாந்தன – தனதான

பாடல்

கமலரு சோகம்பர முடிநடு வேய்பூங்கணை
கலகமர் வாய்தோய்ந்தம – ளியின்மீதே

களையற மீதூர்ந்தெழ மதனவி டாய்போம்படி
கனவிய வாரேந்தின – இளநீர்தோய்ந்

தெமதுயிர் நீலாஞ்சன மதர்விழி யால்வாங்கிய
இவளுடன் மால்கூர்ந்திடு – மநுபோகம்

இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்
இதவிய பாதாம்புய – மருள்வாயே

அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பர
அதுலன நீலாம்பர – மறியாத

அநகர நாளாங்கிதர் தமையுமை யாள்சேர்ந்தருள்
அறமுறு சீகாஞ்சியி – லுறைவோனே

விமலகி ராதாங்கனை தனகிகி தோய்காங்கெய
வெடிபடு தேவேந்திர – னகர்வாழ

விரிகடல் தீமூண்டிட நிசிசரர் வேர்மாண்டிட
வினையற வேல்வாங்கிய – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !