திருப்புகழ் பாடல் 343 | Thiruppugazh Song 343

திருப்புகழ் பாடல் 343 – காஞ்சீபுரம் : சீசி முப்புர | Thiruppugazh Song 343

ராகம் – தர்பார்
தாளம் – மிஸ்ரசாபு (3 1/2)

தகிடதகதிமி – 3 1/2
தான தத்தனத் தான தத்தனத்
தான தத்தனத் தான தத்தனத்
தான தத்தனத் தான தத்தனத் – தனதான

பாடல்

சீசி முப்புரக் காடு நீறெழச்
சாடி நித்திரைக் கோசம் வேரறச்
சீவன் முத்தியிற் கூட வேகளித் – தநுபூதி

சேர அற்புதக் கேல மாமெனச்
சூரி யப்புவிக் கேறி யாடுகச்
சீலம் வைத்தருட் டேறி யேயிருக் – கறியாமற்

பாசம் விட்டுவிட் டோடி போனதுப்
போது மிப்படிக் காகி லேனினிப்
பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித் – தடியேனைப்

பார டைக்கலக் கோல மாமெனத்
தாப ரித்துநித் தார மீதெனப்
பாத பத்மநற் போதை யேதரித் – தருள்வாயே

தேசில் துட்டநிட் டூர கோதுடைச்
சூரை வெட்டியெட் டாசை யேழ்புவித்
தேவர் முத்தர்கட் கேத மேதவிர்த் – தருள்வோனே

சீர்ப டைத்தழற் சூல மான்மழுப்
பாணி வித்துருப் பாத னோர்புறச்
சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் – குருநாதா

காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக்
கோவ லத்தியிற் கான நான்மறைக்
காடு பொற்கிரிக் காழி யாருர்பொற் – புலிவேளூர்

காள அத்தியப்ட பால்சி ராமலைத்
தேச முற்றுமுப் பூசை மேவிநற்
காம கச்சியிற் சால மேவுபொற் – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !