திருப்புகழ் பாடல் 354 | Thiruppugazh Song 354

திருப்புகழ் பாடல் 354 – திருவானைக்காவல்: அம்புலி நீரை | Thiruppugazh Song 354

தந்தன தானத் தானன தந்தன தானத் தானன
தந்தன தானத் தானன – தனதான

பாடல்

அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவிய
ஐந்தலை நாகப் பூஷண – ரருள்பாலா

அன்புட னாவிற் பாவது சந்தத மோதிப் பாதமு
மங்கையி னானிற் பூசையு – மணியாமல்

வம்பணி பாரப் பூண்முலை வஞ்சியர் மாயச் சாயலில்
வண்டுழ லோதித் தாழலி – லிருகாதில்

மண்டிய நீலப் பார்வையில் வெண்துகி லாடைச் சேர்வையில்
மங்கியெ யேழைப் பாவியெ – னழிவேனோ

கொம்பனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி
குண்டலி யாலப் போசனி – யபிராமி

கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி
குன்றது வார்பொற் காரிகை – யருள்பாலா

செம்பவ ளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலை
திண்புய மாரப் பூரண – மருள்வோனே

செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய
தென்திரு வானைக் காவுறை – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !