திருப்புகழ் பாடல் 356 | Thiruppugazh Song 356

திருப்புகழ் பாடல் 356 – திருவானைக்காவல்: Thiruppugazh Song 356

ஆரமணி

தானதன தானத் தானதன தானத்
தானதன தானத் – தனதான

பாடல்

ஆரமணி வாரைப் பீறியற மேலிட்
டாடவர்கள் வாடத் – துறவோரை

ஆசைமட லூர்வித் தாளுமதி பாரப்
பாளித படீரத் – தனமானார்

காரளக நீழற் காதளவு மோடிக்
காதுமபி ராமக் – கயல்போலக்

காலனுடல் போடத் தேடிவரு நாளிற்
காலைமற வாமற் – புகல்வேனோ

பாரடைய வாழ்வித் தாரபதி பாசச்
சாமளக லாபப் – பரியேறிப்

பாய்மதக போலத் தானொடிக லாமுற்
பாடிவரு மேழைச் – சிறியோனே

சூரர்புர சூறைக் காரசுரர் காவற்
காரஇள வேனற் – புனமேவுந்

தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச்
சோதிவளர் காவைப் – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !