திருப்புகழ் பாடல் 54 – திருச்செந்தூர்
தனதன தனதன தனதன தன
தந்தத் …… தனதானா
கொலைமத கரியன ம்ருகமத தனகிரி
கும்பத் …… தனமானார்
குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல்
கொண்டுற் …… றிடுநாயேன்
நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழி
நின்றுற் …… றிடவேதான்
நினதிரு வடிமல ரிணைமன தினிலுற
நின்பற் …… றடைவேனோ
சிலையென வடமலை யுடையவர் அருளிய
செஞ்சொற் …… சிறுபாலா
திரைகட லிடைவரும் அசுரனை வதைசெய்த
செந்திற் …… பதிவேலா
விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்வி
ரும்பிப் …… புணர்வோனே
விருதணி மரகத மயில்வரு குமரவி
டங்கப் …… பெருமாளே.