Thiruppugazh Song 64 – திருப்புகழ் பாடல் 64

திருப்புகழ் பாடல் 64 – திருச்செந்தூர்
ராகம் – ஆபோகி; தாளம் – சதுஸ்ர ஏகம் – மிஸ்ர நடை (14)
(எடுப்பு – அதீதம்)

தனத்தந்தன தனத்தந்தன
தனத்தந்தன …… தனதானத்

தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர
தவிக்குங்கொடி …… மதனேவிற்

றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு
தமிழ்த்தென்றலி …… னுடனேநின்

றெரிக்கும்பிறை யெனப்புண்படு
மெனப்புன்கவி …… சிலபாடி

இருக்குஞ்சிலர் திருச்செந்திலை
யுரைத்துய்ந்திட …… அறியாரே

அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர
மனுக்குந்தெரி …… வரிதான

அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு
மரற்கும்புரி …… தவபாரக்

கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை
வரிக்குங்குரு …… பரவாழ்வே

கிளைக்குந்திற லரக்கன்கிளை
கெடக்கன்றிய …… பெருமாளே.