Thayumanavar Songs – பெரியநாயகி

பெரியநாயகி காற்றைப் பிடித்துமட் கரகத் தடைத்தபடிகன்மப் புனற்குளூறுங்கடைகெட்ட நவவாயில் பெற்றபசு மட்கலக்காயத்துள் எனையிருத்திச் சோற்றைச் சுமத்திநீ பந்தித்து வைக்கத்துருத்திக்குள் மதுஎன்னவேதுள்ளித் துடித்தென்ன பேறுபெற் றேன்அருள்தோயநீ பாய்ச்சல்செய்து நாற்றைப் பதித்ததென ஞானமாம் பயிரதனைநாட்டிப் புலப்பட்டியும்நமனான தீப்பூடும் அணுகாமல் முன்னின்றுநாடுசிவ போகமான பேற்றைப் பகுத்தருளி எனையாள வல்லையோபெரியஅகி லாண்டகோடிபெற்றநா யகிபெரிய கபிலைமா நகர்மருவுபெரியநா யகியம்மையே. 1.

Thayumanavar Songs – அகிலாண்ட நாயகி

அகிலாண்ட நாயகி வட்ட மிட்டொளிர்பி ராண வாயுவெனுநிகள மோடுகம னஞ்செயும்மனமெ னும்பெரிய மத்த யானையைஎன்வசம டக்கிடின் மும் மண்டலத் திட்ட முற்றவள ராச யோகமிவன்யோக மென்றறிஞர் புகழவேஏழை யேனுலகில் நீடு வாழ்வன்இனிஇங்கி தற்கும்அனு மானமோ பட்ட வர்த்தனர் பராவு சக்ரதரபாக்ய மானசுப யோகமும்பார காவிய கவித்வ நான்மறைபராய ணஞ்செய்மதி யூகமும் அட்ட சித்தியுந லன்ப ருக்கருளவிருது கட்டியபொன் அன்னமேஅண்ட கோடிபுகழ் காவை வாழும்அகிலாண்ட நாயகியென் அம்மையே. 1.

Thayumanavar Songs – மலைவளர்காதலி

மலைவளர்காதலி பதியுண்டு நிதியுண்டு புத்திரர்கள் மித்திரர்கள்பக்கமுண் டெக்காலமும்பவிசுண்டு தவிசுண்டு திட்டாந்த மாகயமபடரெனுந் திமிர மணுகாக் கதியுண்டு ஞானமாங் கதிருண்டு சதிருண்டுகாயசித் திகளுமுண்டுகறையுண்ட கண்டர்பால் அம்மைநின் தாளில்கருத்தொன்றும் உண்டாகுமேல் நதியுண்ட கடலெனச் சமயத்தை யுண்டபரஞானஆ னந்தஒளியேநாதாந்த ரூபமே வேதாந்த மோனமேநானெனும் அகந்தைதீர்த்தென் மதியுண்ட மதியான மதிவதன வல்லியேமதுசூ தனன்தங்கையேவரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலைவளர்காத லிப்பெண்உமையே. 1. தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலேசிற்றிடையி லேநடையிலேசேலொத்த விழியிலே பாலொத்த மொழியிலேசிறுபிறை நுதற்கீற்றிலே பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனைகந்தபொடியிலே அடியிலேமேல்பூரித்த முலையிலே நிற்கின்ற …

Thayumanavar Songs – கற்புறுசிந்தை

கற்புறுசிந்தை கற்புறு சிந்தை மாதர் கணவரை அன்றி வேறோர்இற்புறத் தவரை நாடார் யாங்களும் இன்ப வாழ்வுந்தற்பொறி யாக நல்குந் தலைவநின் னலதோர் தெய்வம்பொற்புறக் கருதோங் கண்டாய் பூரணா னந்த வாழ்வே. 1. முருந்திள நகையார் பார முலைமுகந் தழுவிச் செவ்வாய்விருந்தமிர் தெனவ ருந்தி வெறியாட்டுக் காளாய் நாளும்இருந்தலோ காய தப்பேர் இனத்தனாய் இருந்த ஏழைபொருந்தவுங் கதிமே லுண்டோ பூரணா னந்த வாழ்வே. 2. தீதெலாம் ஒன்றாம் வன்மை செறிந்திருட் படலம்போர்த்தபாதகச் சிந்தை பெற்ற பதகனுன் பாத நீழல்ஆதர …

Thayumanavar Songs – ஆக்குவை

ஆக்குவை ஆக்குவை மாயை யாவும் நொடியினில் அவற்றை மாளநீக்குவை நீக்க மில்லா நினைப்பொடு மறப்பு மாற்றிப்போக்கொடு வரவு மின்றிப் புனிதநல் லருளா னந்தந்தாக்கவுஞ் செய்வா யன்றோ சச்சிதா னந்த வாழ்வே. 1.

Thayumanavar Songs – தன்னை

தன்னை தன்னை அறியத் தனதருளால் தானுணர்த்தும்ம்ன்னைப் பொருளெனவே வாழாமற் பாழ்நெஞ்சேபொன்னைப் புவியைமடப் பூவையரை மெய்யெனவேஎன்னைக் கவர்ந்திழுத்திட் டென்னபலன் கண்டாயே. 1.

Thayumanavar Songs – திடமுறவே

திடமுறவே திடமுறவே நின்னருளைச் சேர்த்தென்னைக் காத்தாளக்கடன்உனக்கென் றெண்ணிநின்னைக் கைகுவித்தேன் நானலனோஅடைவுகெட்ட பாழ்மாயை ஆழியிலே இன்னமல்லல்படமுடியா தென்னாவிப் பற்றே பராபரமே. 1. ஆராமை கண்டிங் கருட்குருவாய் நீயொருகால்வாராயோ வந்து வருத்தமெல்லாந் தீராயோபூராய மாகஅருட் பூரணத்தில் அண்டமுதல்பாராதி வைத்த பதியே பராபரமே. 2. வாழாது வாழஉனை வந்தடைந்தோர் எல்லாரும்ஆழாழி என்னஅரு ளானார் அழுக்காற்றோளேழாய் எனவுலகம் ஏசுமினி நானொருவன்பாழாகா வாறுமுகம் பார்நீ பராபரமே. 3. உள்ளத்தி னுள்ளே ஒளித்தென்னை ஆட்டுகின்றகள்ளக் கருணையையான் காணுந் தரமாமோவெள்ளத்தை மாற்றி விடக்குண்பார் நஞ்சூட்டும்பள்ளத்தின் மீன்போற் பதைத்தேன் …

Thayumanavar Songs – முகமெலாம்

முகமெலாம் முகமெ லாங்கணீர் முத்தரும் பிடச்செங்கை முகழ்ப்பஅகமெ லாங்குழைந் தானந்த மாகநல் லறிஞர்இகமெ லாந்தவம் இழைக்கின்றார் என்செய்கோ ஏழைசகமெ லாம்பெற நல்லருள் உதரமாச் சமைந்தோய். 1.

Thayumanavar Songs – எடுத்த தேகம்

எடுத்த தேகம் எடுத்த தேகம் பொருளாவி மூன்றும்நீஎனக்கொன் றில்லை எனமோன நன்னெறிகொடுத்த போது கொடுத்ததன் றோபினுங்குளறி நானென்று கூத்தாட மாயையைவிடுத்த வாறுங்கண் ணீரொடு கம்பலைவிலகு மாறுமென் வேட்கைப்ர வாகத்தைத்தடுத்த வாறும் புகலாய் சிரகிரித்தாயுமான தயாபர மூர்த்தியே. 1. நோயும் வெங்கலிப் பேயுந் தொடரநின்நூலிற் சொன்ன முறைஇய மாதிநான்தோயும் வண்ணம் எனைக்காக்குங் காவலுந்தொழும்பு கொள்ளுஞ் சுவாமியு நீகண்டாய்ஓயுஞ் சன்மம் இனியஞ்சல் அஞ்சலென்றுலகங்கண்டு தொழவோர் உருவிலேதாயுந் தந்தையும் ஆனோய் சிரகிரித்திடமுறவேதாயு மான தயாபர மூர்த்தியே. 2.