Abirami Andhathi Lyrics in Tamil – Songs 91 to 100

அரசாங்க அனுகுலம் பெற

மெல்லிய நுண்ணிடை மின்னனையாளை விரிசடையோன்
புல்லிய மென்முலை பொன்னனையாளைப் புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழும்அடியாரைத் தொழும் அவர்க்குப்
பல்லியம் ஆர்த்தொழ வெண்பகடு ஊரும் பதம் தருமே.91

மனப்பக்குவம் உண்டாக

பதத்தே உருகிநின் பாதத்திலே மனம் பற்றி உன்றன்
இத்ததே ஒழுக அடிமைகொண்டாய் இனி யான்ஒருவர்
மதத்தே மதிமயங் கேன் அவர் போனவழியும் சொல்லேன்
முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே.92

உள்ளத்தில் நிறைவு உண்டாக

நகையே இக்திந்த ஞாலம்எல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ்முளை மானே முதுகண் முடிவில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பதும்நாம்
மிகையே இவள்தன் தகைமையே நாடி விரும்புவதே. 93

மனதார வழிபட்டுப் பலன் பெற

விரும்பித் தொழும் அடியார்விழிநீர்மல்கி மெய்புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தமாகி அறிவிழந்து
சுரும்பிர் களித்து மொழிதடுமாறி முன்சொன்ன வெல்லாம்
தரும்பித்தர் ஆவரென்றால் அபிராமி சமயம்நன்றே. 94

தூய மனநிலை பெற

நன்றே வருகினும் தீதே விளைகினும் நான்அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்குள்ளவெல்லாம்
அன்றே உனதென்று அளித்துவிட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே. 95

பதவியும் புகழும் பெற

கோமள வல்லியை அல்லியந்தாமரைக் கோயில்வைகும்
யாமள வல்லியை ஏதமிலாளை எழுதரிய
சாமள மேனிச் சகல கலாமயில் தன்னைத் தம்மால்
ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் அதிபரே. 96

தர்மங்கள் செய்து பலன்பெற

ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்தங்கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன்முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தைலையே. 97

பிறர் வஞ்சனையால் பதிக்கபடதிருக்க

தைவந்து நின்அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கைவந்த தீயும் தலைவந்த ஆறும் கரந்ததெங்கே
மேய்வந்த நெஞ்சின்அல்லால் ஒருகாலும் விரகர்தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகஅறியா மடப் பூங்குயலே. 98

மனதில் அருள்தன்மை வளர

குயிலாய் இருக்கும் கடம்ப அடவியிடைக் கோல இயல்
மயிலாய் இருக்கும் இமய சலத்திடை வந்துதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கைலாயருக்கு அன்றுஇமவான் அளித்த கனங்குழையே. 99

அம்பிகையை மனதில் தரிசிக்க

குழையைத் தழுவிய கொன்றையந்தார்கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநேடுந்தோளும் கருப்புவில்லும்
விழியைப் பொருதிறல் வேரியம் பானமும் வேண்ணகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிகின்றவே. 100

நூற் பயன்

ஆத்தாளை எங்கள் அபிராம வள்ளியை அண்டம்எல்லாம்
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளைப் புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே