என்னென்று கூறட்டும் என்னப்பனே
விழிபார்த்திடும் நாவிலும் உந்தன் முகம்
உன்பக்தனென்தன் மனமெங்கும் கண்ணன் மகன்
உன்மந்திரம் ஐயன் ஐயனய்யப்பா (என்)
உள்ளத்தில் கல்லுமுள்ளுகுத்தும் தைக்கும் நந்தவனமிவ்வுலக
வாழ்க்கைப் பாதை அறியானால் வந்ததிந்த பாதையன்றோ
என்துயரம் மாறுதே உள்ளம் அன்பில் ஊறுதே
ஐயன் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா (என்)
ஐயன் அன்று இருமுடி சுமந்து போன இங்கு வந்து
காட்டில் வாழும் காட்டாளர் வண்ண எழில் காணுகையில்
சிவனையே கண்ணில் காணும் தன்மையென எண்ணுகின்றேன்
சரணமய்யப்பா சாமி சரணம் ஐயப்பா (என்)
கண்ணன் பிள்ளை மாமலையை உள்மயங்க நின்று பார்த்து
மலையது முழுநிலவோளியில் மாதவனின் பாற்கடலாய்
கண்டு கொண்டேன் மாயோனை பாவமெல்லாம் இன்றுமாற
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா (என்)
உள்ளமென்ற சன்னிதானம் ஓடும்பம்பை கானமந்திரம்
இசையில் செய்யும் அபிஷேகம் நாளும் நாத சந்தோஷம்
உலகம் சொல்லும் தெய்வநாமம் உன்திருவடி சரண மொன்றே
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா (என்)