சரணம் பாடுவோம்
ஸ்வாமி சரணம் பாடுவோம்
சபரி நாதனை.. போற்றி
சரணம் பாடுவோம் (சரணம் பாடுவோம்)
வான்மழை மேகம் வந்து
பூ மழை தூவும்..
ஐயன் தாமரை பாதம் ..
அது தருமத்தின் கூடம் (வான்மழை மேகம்)
பால் அபிஷேகம் ..
கண்டால் பாவங்கள் தீரும்
என்றும் நெய் அபிஷேகம் ..
கண்டால் நிம்மதி சேரும்.. (பால் அபிஷேகம்)
சரணம் பாடுவோம்
ஸ்வாமி சரணம் பாடுவோம்
சபரி நாதனை.. போற்றி
சரணம் பாடுவோம்
மாமலை தோறும் எங்கள்
மணிகண்டன் நாதம் ..
அவன் தாழ் பணி போதும்
நெஞ்சம் தூய்மையில் வாழும்
ஆலய தீபம் நின்று
ஆறுதல் கூறும்..
அவன் கோமள ரூபம் ..
கண்டால் பேரருள் சேரும் ..
ஆலய தீபம் நின்று
ஆறுதல் கூறும்..
அவன் கோமள ரூபம் ..
கண்டால் பேரருள் சேரும் ..
சரணம் பாடுவோம்
ஸ்வாமி சரணம் பாடுவோம்
சபரி நாதனை.. போற்றி
சரணம் பாடுவோம்
சாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சரணம் பாடுவோம்
ஸ்வாமி சரணம் பாடுவோம்
சபரி நாதனை.. போற்றி
சரணம் பாடுவோம் (சரணம் பாடுவோம்)