கார்த்திகை பிறந்தது உனக்காக
கார்த்திகை பிறந்தது உனக்காக
நான் கட்டேந்தி வருவேன் உனைக் காண
கார்த்திகை பிறந்தது உனக்காக
நான் கட்டேந்தி வருவேன் உனைக் காண (2)
மணிகண்டனே உன் மலர்முகம் பார்த்து
வருவேன் வாழ்வினில் பலன் சேர்த்து என்
இருமுடி பாரம் இறக்கி வைத்து (கார்த்திகை பிறந்தது)
சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
பூமரத்து நிழல் பார்த்து
ஓய்வாக நான் சாய்ந்தேன்
அட்டா அதுவோ இலையுதிர் காலம்
வானத்து குடை கீழே
பசும்புல்லின் பாய் மேலே
படுத்தேன் அதுவோ
அடை மழைக் காலம்
துரும்பானேன் புயல்காலம்
துளிர்விட்டேன் வெயில்காலம்
இறைவா உன் துணை வேண்டும்
கைகூடும் கார்காலம்
இருமுடி சுமந்து நடந்திடுவேன்
பெருவழிப் பாதை கடந்திடுவேன்
பரம்பொருள் உன்னை நாடிடுவேன்
வரும் துயர் யாவும் தீர்த்திடுவேன் (கார்த்திகை பிறந்தது)
சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
இல்லாத வறியோர்க்கு பொருள் அள்ளித்தருகின்ற
நல்லோர் வாழ்ந்தது கரிகாலம்
இருக்கின்ற உயிருக்கு விலை பேசித் திரிகின்ற
வஞ்சகர் நடைபோடும் கலிகாலம்
பணமிருந்தால் நிகழ்காலம்
பகை வந்தால் போர்க்காலம்
ஐயா உன் அருளிருந்தால் ஒளிவீசும் எதிகாலம்
பணமிருந்தால் நிகழ்காலம்
பகை வந்தால் போர்க்காலம்
ஐயா உன் அருளிருந்தால் ஒளிவீசும் எதிகாலம்
சரணம் சொல்லி பாடிடுவேன்
சபரிமலைதனில் ஏறிடுவேன்
பதினெட்டு படியில் தவம் கிடப்பேன்
தரிசனம் கண்டே திரும்பிடுவேன் (கார்த்திகை பிறந்தது)