ஓங்கார நாதம் உயர்வான வேதம்
தேனான கீதம் சாஸ்தா உன் நாமம் (ஓங்கார)
ஒருகோடி தீபம் ஒளிவீசும் கோலம்
அருளாகத் தோன்றும் ஐயா உன் ரூபம்
பனிதூவும் மாதம் மணிமாலை போடும்
மனம் யாவும் பாடும் தேவா உன்கோஷம் (ஓங்கார)
பம்பாவின் நீரில் பிணியாவும் தீரும்
படியேறும் போதே நலம் கோடி சேரும்
மலையெங்கும் வீசும் அபிஷேக வாசம்
மனைவாழச் செய்யும் மணிகண்ட கோஷம் (ஓங்கார)
காலங்கள் தோறும் உன் நாமம் பாடும்
மனமொன்று போதும் வேறென்ன வேண்டும்
இல்லங்கள் தோறும் நீ தானே தெய்வம்
என்றென்றும் சொல்வோம் சாஸ்தா உன் சரணம் (ஓங்கார)
தன்னன்னா தினம் தன்னன்னா தினம் சரணம் ஐயப்பா
வழிநடை சரணங்கள் சபரிமலை பக்தர்களுக்காக
பவனி வர்றார் இங்கே சாமி சரணம் ஐயப்பா
வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே
பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
சாஸ்தா தசகம் : லோக வீரம் மஹா பூஜ்யம்
லோக வீரம் மஹா பூஜ்யம்
சத்திய ஒளி பரப்பும் சபரிமலை