சபரிமலையில் தாழ்ந்தே வழிந்திடும் புண்ணிய நதியாம் பம்பா
சபரிமலையினில் மேலாய் வழிந்திடும் சரணமந்திரமாம் பம்பா
பம்பா நதிகள் வளம் செய்யும் சன்னிதி எத்தனை தூய்மை
ஐயப்பா எத்தனை தூய்மை எத்தனை தூய்மை (சபரி)
எரிமேனிப்பேட்டைதுள்ளி வரும் கன்னிமலையாரும்
பதினெட்டாம் முறை மலைக்கு வருகின்ற குருசாமியோரும்
பக்தியாம் நெய்யபிஷேகம் செய்யும்-உன்
அழகுடை ரூபம் ஐயப்பா எத்தனை தூய்மை (சபரி)
ஜீவன் முக்தராய் ஆகுகின்ற பரமசித்தர்கள் தாமும்
இருமுடி கட்டும் ஏந்தி சரணம் பாடுகின்ற பக்தர்களும்
ஒன்றுபோல் உந்தன் திருவடி அடையும்
இவ்வழகிய தரிசனம் ஐயப்பா எத்தனை தூய்மை (சபரி)
காட்டில் வந்து நான் துணைக்கழைத்தேன்
துணையருள் நீ வந்தே
ஜீவியமாம் கொடும் காடு கடக்கேன்
துணையருள் நீ வந்தே – ஐயப்பா
துணையருள் நீ வந்தே (காட்டில்)
பாரினில் கள்ளும் முல்லும் கொண்டென்
பாதங்களெவ்வளவோ நைந்து முரிந்தே
கோரத்ய குன்றும் மலையும் கடந்து
மனமும் எவ்வளவோ தளர்ந்தும் வீழ்ந்தேன்
ஏகனாய் அலைந்தேன் நான்புவியில்
ஏகாம் பரனே உனைக் கண்டிடவே (காட்டில்)
பந்தமாம் பாசமாம் கட்டுகளில்
பாவி எவ்வளவாய் அமிழ்ந்து விட்டேன்
காமக்கோர காடி தாம் புவி தன்
பிடியில் எவ்வளவாய் நான்தினைக்கப்பட்டேன்
ஏகநாய் அலைந்தேன் நான்புவியில்
ஏகாம்பரனே உனைக் கண்டிடவே (காட்டில்)