உலகத்தத்துவமந்திரமே உணர்த்தும் நாதாவாழ்வுக்கு
வளமாய் வழியும் காட்டிய உன் அர்ச்சனையே தினம் (உலக)
சரணமய்யப்பா சுவாமி சரணமய்யப்பா
சைவவைஷ்ணவனே சுவாமி சரணமய்யப்பா
வேட்டையாடும் நாதனெங்கள் மனதில் எங்குமுள்ள
மோகம் கோபம் மிருகம் யாவும் விரைந்தோட்டுங்கள்
மண்டல விரதம் காத்து உந்தன் சன்னிதானம்
குருசாமியோரும் இன்று வந்து நின்றோம் (சரணமாய்)
பம்பா நதிக்கு வந்து மணிகண்டன் மந்திரங்கள்
சொல்லி பம்பையில் ஞானத்தை உணர்ந்தோமே
என்றும் உந்தன் சங்கீதம் பம்பைபோல நெஞ்சில் பொங்க
பம்பையில் விளக்குவைத்து இருள் அகன்றோம் (சரணமய்)
ஞானபலம் சேர்க்கும் நாதா பாதபலம் தந்தாய்
மலைவந்து தியானித்து உன்னில் கலந்தோம்
பிரிவில்லை மதஜாதி அருள்கூடும் ஒற்றுமைக்கே
ஹரிமகேஷ்வரனின் புத்ரதர்மமே ஆகும் (சரணமய்)