வானக புஷ்பம் மண்ணோடு வாசம் பம்பையின் ஓரம்
தேவர் வழிபடும் ஐயனின் பாட்டில் பக்திதரும்ஸ்வரம்
சூரவதம் மண்ணில் வந்த சண்முக அவதார நோக்கம்
மகிஷி பாவத்தின் நிலையை மாற்றும் ஹரிகரபுத்ரன் (கானக)
தெய்வீக பாலன் நாமம் எங்கள் இன்பமும் ஆகும்
மாறாமனத்தால் என்றன் ஞானமே இல்லாது போகும்
ஹரிகர பாலகன் வானகஜோதியின் அற்புதவண்ணம்
மாயத்து மேகத்தை சிவ மூகில்தொட்டிட ஒழிந்திடும் இன்னல் (வானக)
ஞானவிநாயகன் தம்பியமர்ந்துள்ள சன்னிதிகாண
காத்திடும் நாயகன் மாலையணிந்திடும் அன்பரின் கூட்டங்களே
கார்த்திகை மாதமே மலைவரவேண்டி விரதத்தையும் கொண்டோம்
அத்வைத மந்திரமாம் உனபேரைக் கூறி விள கொளி கண்டோம் (கான)
சிவனோடு மாயன் சேர்ந்தருள் செய்திடும்
சபரி சன்னதி வந்தேன்
அருள் வானத்து ஜோதியாய் பூலோக வாழ்க்கையை
காப்பவன் தரிசனம் கண்டேன் -ஐயப்பா
என்னாள்பவன் தரிசம் கண்டேன் (சிவனோடு)
பூமியில் உயர்சத்ய வேதங்களும்
மாறா அருள் ஞானிகளும்
உலகமும் ஜீவ ஞானிகளும்
நாதா உன் பிரதிபிம்பம் – ஐயப்பா
என் நாதா உன் பிரதி பிம்பம் (சிவனோடு)
சன்னிதி கற்பூர நெய்தீபங்களில்-உனைப்
பொன்னாய் பூவாய்ப் பார்க்கையில்
பரமாத்மாவின் பேரின்பத்தில்
நிம்மதி ஐஸ்வர்யம் கொண்டேன்-ஐயப்பா
நிம்மதி ஐஸ்வர்யம் கொண்டேன் (சிவனோடு)