Vaazhga Vaazhga Devalogam Vaazhga – Ayyappan Bajanai Songs

வாழ்க வாழ்க தேவலோகம் வாழ்க
வாழ்க வாழ்க திருமைக்கோலம் வாழ்க
வாழ்க வாழ்க பஞ்சத்ரியம் வாழ்க
வாழ்க வாழ்க அஷ்டகானம் வாழ்க (வாழ்க)

மூன்று முணம் வாழ்க சன்னிதானம் வாழ்க
வித்தையும் வாழ்க வித்தையும் வாழ்க
பஞ்ச பூதங்களின் பூதப் பெருமாளாய்
வேட்டைக்கு ஒரு மகன் ஐயப்பன் வாழ்க (வாழ்க)

ஒண்ணாம் திருப்படி பொன்னளக்கும் நேரம் பாலகணபதி வாழ்க
இரண்டாம் திருப்படி இசைகேட்கும் நேரம் வாணி சரஸ்வதி வாழ்க
மூணாம் பொன்படி பூப்பந்தலிட்ட முக்கோடிதேவரும் வாழ்க
நாலாம் பொன்படி நாதம் முழக்கும் நான்கு வேதம் வாழ்க
அஞ்சாம் திருப்படி ஏறித்துடி கொட்டும் பஞ்ச பூதங்களும் வாழ்க

ஆறாம் பொன்படி அர்ச்சனை செய்யும்
ஆறுசாஸ்திரங்களும் வாழ்க
ஏழாம் சேவடி ஏழிசை மீட்டும் ஏழுஸ்வரங்களும் வாழ்க
எட்டாம் திருப்படி தொட்டு தொழுகிறோம் எட்டு திசையும் படி ஜொலிக்க
ஒன்பதாம் திருப்படி நோன்பு முடிக்கையில் ஒன்பது கோள்களும் வாழ்க
பத்தாம் திருப்படி கண்திறக்கும்போது பத்தவராம் கொடுக்க

பதினொன்னாம் திருப்படி பாதம்பதித்து ஆதித்த தேவனைக் காணும்
பன்னென்டாம் திருப்படி பார்த்து தொழும்நேரம் பன்னென்று தேசமும் வாழ்க
பதிமூணாம் பூப்படி கால் வைக்கும்போது அத்தனை உயிர்களும் வாழ்க
பத்தும் நாலும் படி ஏறிச்செல்கையில் பதினாலு லோகமும் வாழ்க
பத்துமோர் அஞ்சுமாம் பொன்படி ஏறிட மாளிகைப்புறமும் வாழ்க

பத்துமோர் ஆறும்படி மேல் பூஜிக்க வாபருசாமியும் வாழ்க
பதினேழாம் பொன்படி தானாகவே காண்கையில் கொச்சு கடுத்தையும் வாழ்க
பதினெட்டாம் திருப்படி பொன்னளக்கும் நேரம் கேசாதி பாதமும் வாழ்க
பாதாதி கேசமும் வாழ்க (வாழ்க)